இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக சிபிஐ முன் நேற்று ஆஜரானார்.
வீரபத்ர சிங் 2009-12 கால கட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்தபோது ரூ. 6.03 கோடி அளவுக்கு தனது மற்றும் குடும்பத்தினர் பெயரில் வருமானத் துக்கு அதிகமான அளவு சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட் டது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்்த் சவுகான், சன்னி லால் சவுகான் ஆகியோர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச முதல்வராக உள்ள வீரபத்ர சிங் (81) இவ்வழக்கு விசாரணைக் காக சிபிஐ முன் நேற்று ஆஜரானார்.
சிபிஐ செய்தித்தொடர்பாளர் கூறும்போது, “கணக்கில் வராத பணத்தை குடும்பத்தினர் பெயரில் எல்ஐசி திட்டங்களில் முதலீடு செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார். இந்த வரு மானங்களை விவசாயம் மூலம் பெற்றதாக வீரபத்ர சிங் காட்ட முயன்றதாகவும் குற்றம்சாட்டப் பட்டுள்ளது.