இந்தியா

காங். படுதோல்வி: டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா

செய்திப்பிரிவு

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அவர் தனது ராஜிநாமா கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுனருக்கு இன்று காலை 11.30 மணி அளவில் அனுப்பியுள்ளார்.

தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும், தவறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

முந்தைய மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் மகத்தான் வெற்றிகள் பெற்று, தொடர்ந்து மூன்று முறையாக முதல்வர் பதவியில் வகித்தவர் ஷீலா தீட்சித்.

கடந்த மூன்று முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரான ஷீலா தீட்சித், இம்முறை புது டெல்லி தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலைவிட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கிறார்.

பகல் 1.30 மணி நிலவரப்படி, டெல்லியில் பாஜக 33 இடங்களிலும், ஆம் ஆத்மி 28 இடங்களிலும் வெற்றி முகம் கண்டிருந்தது. காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.

SCROLL FOR NEXT