மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சல்மான் குர்ஷித், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சசி தரூர், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 13 பேர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப் பட்டனர்.
ராகுல் காந்தியின் ஆலோசனையின்பேரில் காங்கிரஸ் ஊடகப் பிரிவை வலுவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் தவிர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி ஷோபா ஓஜா, உத்தரப் பிரதேச மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா ஆகிய பெண் தலைவர்களும் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மட்டுமே நியமித்து வந்தார். தற்போது சோனியாவும் ராகுலும் இணைந்து புதிய செய்தித் தொடர்பாளர்களை தேர்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளனர்.