இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஊரி பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய ராணுவத்தின் ஜூனியர் அதிகாரி ஒருவர் பலியானார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, ஸ்ரீநகர் - முசாபர்பாத் பகுதியில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்.14- ஆம் தேதி முதல் பாகிஸ்தான் தாக்குதலுக்கு 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 130 முறை பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இது கட்ந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.