இந்தியா

திருமலையில் பக்தர்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

வார இறுதி, ரம்ஜான் விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர் கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

சனி, ஞாயிறு அதைத் தொடர்ந்து திங்கள்கிழமையும் (ரம்ஜான் பண்டிகை) விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர் கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 20 அறைகளும் பக்தர் களால் நிரம்பி வழிகின்றன. இத னால் ஏழுமலையானை தரிசிக்க 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மலைப் பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்துக்கும் 3 மணி நேரம் வரை ஆகிறது.

இதற்கிடையே படித் திருவிழா இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங் களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT