ரஷ்யாவில் நடந்த உலக மணற்சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்.
‘வேர்ல்டு அரவுண்ட் அஸ்’ என்ற தலைப்பில் மாஸ்கோவில் கடந்த 22 முதல் 28-ம் தேதி வரை நடந்த இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பங்கேற்றார். அவர் 10 அடி உயரத்தில் விநாயகர் சிலையை எழுப்பி அதில் பசுமையை விளக்கும் வாசகத்தை பொறித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட இந்த சிலைக்காக அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இது குறித்து சுதர்சன் கூறும்போது, ‘‘பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலின் சமநிலைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த சிலையை வடித்தேன்’’ என தெரிவித்தார்.
தங்கப்பதக்கம் வென்ற சுதர்சன் பட்நாயக்கை ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பங்கஜ் சரண் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நவீன் பட்நாயக் வாழ்த்து
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் தனது வாழ்த்து களை தெரிவித்துக் கொண்டார். அவர் தனது ட்விட்டர் பக்கத் தில், ‘‘உலக மணற்சிற்ப சாம் பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சுதர்சனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுதர்சனால் ஒடிசாவுக்கு பெருமை ஏற்பட் டுள்ளது’’ என குறிப்பிட் டுள்ளார்.
கடந்த 2016-ல் நடந்த போட்டியிலும் உலக அமைதியை வலியுறுத்தி மகாத்மா காந்தியின் சிற்பத்தை உருவாக்கி சுதர்சன் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அண்மையில் ஒடிசாவின் புரி கடற்கரையோரத்தில் உலகின் மிகப் பெரிய மணற்சிற்பத்தை உருவாக்கி சுதர்சன் கின்னஸ் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.