இந்தியா

டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி முதல் பலி: 300 காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவு

செய்திப்பிரிவு

டெல்லியில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 17 வயது சிறுமி முதலாவதாகப் பலியாகி உள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கையில் 300 காய்ச்சல் சிகிச்சை மையங்கள் (Fever Clinic) அமைக்க ஆம் ஆத்மி கட்சி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பரவுவது தவிர்க்க முடி யாத நிகழ்வாக உள்ளது. இதற்கு எதிராக மாநில அரசு எடுக்கும் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகும் டெல்லியில் டெங்கு காய்ச்சல் பலி தொடர்ந்து வருகிறது.

இந்த ஆண்டு டெங்கு காய்ச்ச லுக்கு முதல் பலியாக, வட கிழக்கு டெல்லியின் ஜபராபாத் பகுதியில் 17 வயது சிறுமி உயிரிழந்தார். டெங்குவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த புதன்கிழமை லோக் நாயக் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.

டெல்லியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோர் எண் ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தினமும் 200 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். எய்ம்ஸ் பொது சிகிச்சை பிரிவில் சுமார் 400 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் களில், மலேரியா மற்றும் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்ட வர்களும் உள்ளனர்.

டெல்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருவதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த வாரம் 40 என இருந்த இந்த எண்ணிக்கை இந்த வாரம் 90 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கான ரத்தப் பரிசோதனை கட்டணங்களையும் குறைத்து பெற வேண்டும் என அரசு அறிவித் துள்ளது. பிளேட்லெட் கவுண்ட் சோதனைக்கு ரூ. 50, என்.எஸ்.1 எலிசா சோதனைக்கு ரூ. 600 என அரசே கட்டணம் நிர்ணயித்துள் ளது. அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டெங்கு நோயாளி களுக்கு என தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக டெல்லி அரசு சார்பில் 300 காய்ச்சல் சிகிச்சை மையங்களை உடனே அமைக்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவ மனைகளில் இந்த சிகிச்சை மையங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளன.

இவை மட்டுமின்றி, டெல்லியில் புதிய முயற்சியாக தொடங்கப் பட்ட தெருமுனை சிகிச்சை மையங் களின் எண்ணிக்கையும் அதிகரிக் கப்பட உள்ளது. டெல்லியில் அரசுப் பள்ளி மாணவர்களையும் கருத்தில்கொண்டு 110 பள்ளி வளாகங்களில் தெருமுனை சிகிச்சை மையங்கள் அமைக்கப் பட உள்ளன. இவற்றில் மாணவர் களுக்கு மட்டுமின்றி, பொதுமக்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த தெருமுனை சிகிச்சை மையங்களில் தற்போது குறிப் பிட்ட நேரங்களில் பிரபல மருத்துவ மனைகளின் மருத்துவர்கள் ஆலோசனை அளித்து வரு கின்றனர். இந்நிலையில் மேலும் 300 பள்ளிகள் மற்றும் 1000 பொது இடங்களில் இதுபோல் ஆலோசனை அளிக்க திட்டமிடப் பட்டு வருகிறது, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இது வரை 3,17,353 வீடுகளில் டெல்லி அரசு கொசு மருந்து அடித்துள்ளது. கொசுக்கள் பரவும் இடத்தை கண்டு, சுத்தப்படுத்த வேண்டி 47,825 அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளின் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT