உடன் பணியாற்றிய பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தருண் தேஜ்பாலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நெருக்கடி மேலும் வலுத்து வருகிறது.
தருண் தேஜ்பால் மீது கோவா காவல்துறை ஐபிசி 376, 376(2) மற்றும் 354 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 22 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் புகார் வழக்கில் பிற்பகல் 3 மணிக்குள் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என கோவா காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கோவாவில் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நட்சத்திர விடுதியில் உள்ள லிஃப்ட்டுக்குள் தேஜ்பாலும், பாதிக்கப்பட்ட பெண்ணும் செல்வது பதிவாகியுள்ளதாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய ஈமெயில்-களில் பாலியல் அத்துமீறல் லிஃப்டுக்குள் நடந்தது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே தருண் தேஜ்பாலுக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.