பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இரட்டை சகோதரர்கள் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அந்த கூட்டணியை ஆதரித்து லாலு பிரசாத் உத்தரப் பிரதேசம் ரேபரேலி பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒவ்வொரு முறையும் தவறான முடிவு எடுத்து வருகிறார். இதேபோல பிரதமர் நரேந்திர மோடியும் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் மோடியும் ட்ரம்பும் இரட்டை சகோதரர்கள்.
கோத்ரா கலவரத்தின்போது மோடியை, வாஜ்பாய் கடுமையாக கடிந்து கொண்டார். அந்த நேரத் தில் அத்வானிதான் மோடியை காப்பாற்றினார். ஆனால் அவரையே மோடி ஓரம் கட்டி விட்டார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில் பாஜக தோல் வியைத் தழுவுவது உறுதி. அதன்பிறகு மோடியின் செல்வாக்கு தானாக சரியும். அதோடு மத்தியில் மோடியின் ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.