இந்தியா

லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும்: நாராயணசாமி உறுதி

செய்திப்பிரிவு

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி மகாராஷ்டிரத்தின் ராலேகான் சித்தி கிராமத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே.

கடந்த 2011-ல் இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார் அன்னா ஹசாரே.அதன்பின் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.

SCROLL FOR NEXT