இந்தியா

உ.பி. முதல்வர் அகிலேஷ் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அகில இந்திய முலாயம் சிங் யாதவ் பேரவை தலைவர் நந்தகோபால் தம்பி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உத்தரப்பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பகல் 12.45 மணிக்கு வந்தார்.

அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர், திருமண மண்டபத்துக்கு பகல் 1.45 மணிக்கு சென்றார். மணமக்களை வாழ்த்திய பிறகு, கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் பிற்பகல் 2.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து காரில் புறப்பட்ட அகிலேஷ் யாதவ் சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு தயாராக இருந்த சிறப்பு விமானம் மூலம் உத்தரப்பிரதேசம் புறப்பட்டார்.

SCROLL FOR NEXT