இந்தியா

ஓபிசி தேசிய ஆணைய மசோதாவை நிறைவேற்ற முட்டுக்கட்டை: எதிர்க்கட்சிகள் மீது மோடி குற்றச்சாட்டு

பிடிஐ

பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக, பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். பிற்படுத்தப் பட்டோருக்கு பலனளிக்கும் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப் பதற்கு என்ன காரணம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய பிற்படுத் தப்பட்டோருக்கு தேசிய ஆணை யம் அமைக்கும் வகையில் திருத்தப்பட்ட மசோதா 2017, மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. இது, மாநிலங்களவை யிலும் நிறைவேற்றப்பட்டால்தான் சட்டமாக்கப்படும். நடப்புக் கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் ஆளும் பாஜக அரசுக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத தால், எதிர்க்கட்சிகளின் வேண்டு கோளுக்கு இணங்க இந்த மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

சரத்யாதவ், ராம்கோபால் யாதவ் மற்றும் பிரபுல் படேல் உள்ளிட்ட 25 மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுவின் தலைவராக பாஜக உறுப்பினர் பூபேந்தர் யாதவ் உள்ளார். இந்தக் குழு ஆய்வு செய்த பின்னர், பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணைய மசோதா, அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.

பாஜக எம்.பி.க்கள் சந்திப்பு

இந்த நிலையில், பாஜகவின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து, பிற் படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய மசோதாவை மக் களவையில் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் கூறும்போது, நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் சமூக பாதுகாப்புக்கு இந்த மசோதா அங்கீகாரம் வழங்கும்.

ஆனால், மசோதா மாநிலங் களவையில் ஏன் நிறைவேற்றப் படவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது என, அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி வருத்தத்துடன் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பிற்படுத்தப்பட் டோருக்கு தேசிய ஆணையம் அமைக்கும் மசோதா நிறைவேறி இருந்தால், நன்றாக இருந் திருக்கும் எனவும், பிற்படுத் தப்பட்டோரின் வாழ்க்கையை மசோதா எந்த அளவுக்கு மாற்றும் என்பது தொடர்பாக அந்தச் சமூக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டதாக பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டார்.

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறினால், நாடாளு மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்த ஜாதியையும் சேர்க்கவோ, நீக்கவோ முடியாது.

SCROLL FOR NEXT