கேரள கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றது தொடர்பாக இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் சமரசத்துக்கு இடமில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.
கொச்சி அருகே ஃபோர்ட் கொச்சி என்ற இடத்தில் உள்ள கடலோர காவல் படை அலுவல கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
கேரள கடற்பகுதியில் இரு மீனவர்கள் கொல்லப்பட்ட சம்ப வத்தில், இந்திய சட்டங்களின்படி வழக்கு நடத்துவது என்பதே மத்திய அரசின் கொள்கை. இதில் சமரசத்துக்கு இடமில்லை. இந்த வழக்கில் எந்த வகையிலும் நாம் பின்வாங்க மாட்டோம். இந்திய சட்டங்களின்படி இந்த வழக்கை நடத்தி வருகிறோம்.
சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் விபத்து உள்பட சமீபத்திய விபத் துகள் தொடர்பாக இந்திய கடற் படை மீதான விமர்சனங்கள் குறித்து கேட்கிறீர்கள். சில நேரங் களில் விபத்துகள் நிகழ்கின்றன. என்றாலும் இவற்றை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள் வதில்லை.
விபத்துகள் தொடர் பாக கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப் படையில் தீர்வுக்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் என 48 நாடுகளுடன் இந்தியா பாது காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளது. பாது காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த நாடுகள் ஆர்வமுடன் உள் ளன. பல நாடுகள் கூட்டு ராணு வப் பயிற்சி மேற்கொள்ள விரும்புகின்றன.
வெளிநாட்டு கப்பல்கள் பல பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கடற்பகுதி வழியாக திருப்பி விடப்படுகின்றன. இப் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மற்றும் படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம்.
இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதல் கட்டமாக 48 ரேடார்கள் நிறுவப் பட்டுள்ளன. 2வது கட்டமாக 38 ரேடார்கள் நிறுவப்படும். இவற்றில் 34 ரேடார்கள் நாட்டின் முக்கிய நிலப்பகுதியிலும் 6 ரேடார்கள் லட்சத்தீவு பகுதியிலும், 4 ரேடார்கள் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இருக்கும்.
சீன உறவில் முன்னேற்றம்
சீன உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவின் பாதுகாப்பு செயலாளர்கள் டெல்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசு கின்றனர்.
இந்திய சீன எல்லை யில் அமைதி நிலவுகிறது. எல்லை யில் அமைதி நிலவச் செய்வதில் இரு நாடுகளும் அக்கறை செலுத்துகின்றன.
சில இடங்களில் எல்லை வரையறுக்கப்படாததால் அரிதாக சில சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இரு நாடுகளிடையே 8 முதல் 10 பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டியுள்ளது என்றார் அந்தோனி.
முன்னதாக கடலோர காவல் படையில் சிறப்பான சேவையாற்றி யவர்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார்.