தமிழகத்தைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் பெங்க ளூருவில் உள்ள விடுதியில் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறி யாளர் அனிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). 24 வயதான அனி தாவுக்கு பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் சமீபத்தில் வேலை கிடைத்தது. எனவே கடந்த வாரம் பெங்களூரு வந்த அவர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி தினமும் அலுவலகத்துக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை பிற்பகலில் யாரும் இல்லாதபோது 30 வயது மதிக்கத் தக்க மர்ம நபர் விடுதியில் நுழைந்துள்ளார். அனிதாவின் அறைக்குள் நுழைந்த அவர், கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய் துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த விடுதி நிர்வாகம் பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனு மதித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பெங்களூரு குற்றப்பிரிவு போலீ ஸாருடன் இணைந்து குற்ற வாளியை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்தபோது விடுதி அருகே இருந்தவர்களிடமும், விடுதி காப்பாளரிடமும் போலீ ஸார் விசாரணை நடத்தினர். தனியார் தங்கும் விடுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப் படாததால், குற்றவாளியை அடை யாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு ஆணைய தலைவர் வி.எஸ்.உக்ரப்பா, பாதிக்கப்பட்ட தமிழக பெண்ணை சந்திந்து ஆறுதல் தெரிவித்தார். இவ்வழக்கை விரை வாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் வலி யுறுத்தினார்.
பெங்களூரு வந்த ஒரே வாரத்தில் தமிழக மென்பொருள் பொறியாளர் பலாத்காரம் செய் யப்பட்ட சம்பவம் ஐடி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.