70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாஜக எம்.பி.க்கள் தங்களது தொகுதிகளில் தேசிய ஒருமைப்பாட்டு பேரணி நடத்தி பாஜக அரசின் 70 சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசும்போது, “ எம்.பி.க்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை எம்.பி.க்கள் தங்களது தொகுதிகளில் 8 அடி நீள கொடியை ஏந்தியபடி, தேசிய ஒருமைப்பாட்டு பேரணியை நடத்த வேண்டும். நமது அரசின் 70-வது சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நமது மேம்பாட்டுத் திட்டங்களால் மக்கள் நல்ல மனநிலையில் உள்ளனர். இரண்டு ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெளியுறவு அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜ், மோடியின் சமீபத்திய வெளிநாட்டுப்பயணங் கள் குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கினார்.