டெல்லியில் கடந்த 3 மாதங்களில் 1,500 பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்பிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் முகமது காலித். உயரம்குறைவான தோற்றத்தால் புறக்கணிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையின் காரணமாக இவர் பெண்களை மறைமுகமாக இம்சிக்க தொடங்கியிருக்கிறார்.
முகமது காலித்தின் குற்ற நடவடிக்கை குறித்து அவரை கைது செய்தது எப்படி என்பது குறித்தும் டெல்லி போலீஸார் விரிவாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி துணை கமிஷ்னர் விஜய் சிங் கூறும்போது, "கடந்த வாரம் ஒரு பெண் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி, வீடியோக்களை தொடர்ந்து ஒரு நபர் அனுப்பி வருவதாக வடமேற்கு டெல்லி காவல்துறைக்கு புகார் வந்தது.
பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திடமும், மகளிர் அமைப்பிடமும் அளித்த புகாரின் அடிப்படையில் கலித்தை விசாரணை வலையத்துகுள் கொண்டு வந்துள்ளது டெல்லி போலிஸ்.
கலித்தின் அலைபேசியில் கிட்டதட்ட 2100 பெண்களின் கைபேசிகள் எண்கள் இருக்கின்றன. இதில் 1500 பெண்களுக்கு காலித் கடந்த ஏப்ரலில் இருந்து குறுசெய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் அனுப்பி வந்துள்ளார்.
இதற்காக கலித் நூதன முறையையே கையாண்டு வந்திருக்கிறார். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அதிக அளவில் சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். 1995-ம் ஆண்டு இறந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி சிம் கார்டை பெற்றுள்ளார்.
அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி ஏதாவது ஒரு எண்ணுக்கு அழைப்பு விடுப்பார். எதிர்முனையில் பெண் குரல் கேட்டால் அழைப்பை அந்த எண்ணை வாட்ஸ் அப்பில் சேமித்து அந்த எண்ணை பயன்படுத்துபவரின் புகைப்படத்தை ஆராய்கிறார்.
ஒருவேளை அது இளம் பெண்ணுடையது என்றால் உடனடியாக அந்த எண்ணுக்கு தொடர்ந்து ஆபாசப் பதிவுகளை அனுப்புகிறார். யாராவது தொடர்புகொண்டு போலீஸில் புகார் அளிப்பேன் என்று மிரட்டினால் சொல்லிக் கொள்ளுங்கள் நான் போலி சிம் கார்டை பயன்படுத்துகிறேன் அதைவைத்து என்னை கண்டுபிடிக்க முடியாது என சவால் விட்டிருக்கிறார்.
மேலும் அவரது செல்போனில் பெண்களின் வயதைப் பொருத்து ஏ, ஏஏ, ஏ+, ஏ++ (A, AA, A+, A++) அவர்களைப் பிரித்து வைத்திருக்கிறார். அவர் பயன்படுத்திய எண்கள் 8376016283, 7827639789, 7289913347. உரிய ஆவணங்கள் இல்லாமல் கலித்திற்கு சிம் கார்டு வழங்கியதற்காக சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.