‘பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜ்னா’ திட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ மாவட்டத்தில் பேட்டி என்ற கிராமத்தை தத்து எடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜகவின் உத்தரப்பிரதேச மாநிலச் செய லாளர் வீரேந்திர திவாரி நேற்று கூறும்போது, “மாதிரி கிராம திட்டத்தின் கீழ் சரோஜினி நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேட்டி கிராமத்தை ராஜ்நாத் சிங் தத்து எடுத்துள்ளார்” என்றார்.
இந்த கிராமம் லக்னோ மாவட்டத்தில் இடம் பெற்றிருந் தாலும் ராஜ்நாத் சிங்கின் லக்னோ மக்களவை தொகுதியின் கீழ் வரவில்லை. மோகன்லால்கஞ்ச் மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது. லக்னோ மக்களவை தொகுதி நகரப்பகுதிக்குள் வருவதால், இதையொட்டிய கிராமத்தை ராஜ் நாத் சிங் தத்து எடுத்துள்ளார்.