3 நாள் சர்வதேச காற்றாடி விழா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி நதி அருகில் நேற்று தொடங்கியது.
குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இதனை தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதிலும் மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சாதனையாளர்களும் திரளான பார்வையாளர்களும் இதில் பங்கேற்றனர்.
விழாவையொட்டி நகராட்சி பள்ளி மாணவர்களின் சூரிய நமஸ்காரம், மாற்றுத்திறன் மாணவர்களின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.