காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை சீர்குலைக்க எல் லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதி ஹபீஸ் சயீது தலைமையிலான குழு பணம் அனுப்பும் விதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இது ஹபீஸ் சயீதுக்கு எதிரான மிகப்பெரிய ஆதாரமாக கருதப்படுகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, “காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அனுப்புவதற்காக ஜமாத் உத்தவா தலைவர் ஹபீஸ் சயீத் நிதி திரட்டி வருகிறார்.
கடந்த 4 மாதங்களில் 156 வங்கிக் கணக்குகள் வழியாக மொத்தம் ரூ.16.5 கோடி காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த 156 வங்கிக் கணக்குகளில் 23 கணக்குகள் காஷ்மீர் பிரிவினை வாதிகளின் கணக்குகளுடன் நேரடி யாகவோ அல்லது மறைமுகமாவோ தொடர்பு உள்ளது.
ஹபீஸ் சயீத் திரட்டும் பணம் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியா வருகிறது. சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடுகள் வழியாகவும் வருகிறது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துக்கும் இந்த வழியில் அதிக அளவில் பணம் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதை யடுத்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தகைய பரிவர்த்தனை குறித்து மிகுந்த விழிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.