இந்தியா

மோடி ஆட்சியில் ஜனநாயக படுகொலை யெச்சூரி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

வானொலியில் நேற்று மனதின் குரல் நிகழ்ச்சிக்காக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘இந்திரா காந்தி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை யால் நிகழ்ந்த துயரங்களை மக்கள் நினைவுகூர வேண்டும். ஜன நாயகத்தை எவை பாதிக்கச் செய்தது என்பதை கடந்த கால நிகழ்வுகளில் இருந்து அசை போட்டு, நேர்மறையான திசையை நோக்கி நடைபோட வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரி நேற்று கூறியதாவது:

அவசர நிலையின்போது ஜனநாயகம் படுகொலை செய்யப் பட்டது. ஆனால் தற்போதோ அறிவிக்கப்படாத அவசர நிலை மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.

மோடியின் ஆட்சியில் மக்கள் வாழ்வுரிமையும், சுதந்திரமும் மீறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி சொல்வது போல இடையறாத விழிப்புணர்வு தான் சுதந்திரத்துக்கான விலை என்றால், பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகளும், முஸ்லிம்களும் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்காமல் அவர் ஏன் அமைதி காக்க வேண்டும். நமது அரசமைப்பு சட்டம் வாழ்வுரிமையையும், சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அந்த உரிமைகள் மீறப்படுகின்றன. இவ்வாறு யெச்சூரி கூறினார்.

SCROLL FOR NEXT