இந்தியா

உத்தராகண்ட் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை: கணக்கில் வராத பணம் கடத்தப்பட்டதா என ஆய்வு

பிடிஐ

உத்தராகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் பயணித்த ஹெலிகாப்ட ரில் கணக்கில் வராத பணம் கடத்திச் செல்லப்படுகிறதா என தேர்தல் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் அறிவுரையின் படியே தனக்கு இந்த அவ மானம் நேர்ந்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இதையொட்டி மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் ஹெலிகாப்டர் மூலம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற் கொண்டு, தீவிர தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஹல்டுவானி என்ற இடத்தில் தேர்தல் பிரச் சாரத்துக்காக அவர் ஹெலிகாப்ட ரில் வந்திறங்கினார். அப்போது அங்கிருந்த தேர்தல் அதிகாரி கள் சிலர் திடீரென ஹெலி காப்டருக்குள் சென்று தீவிர சோதனை நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் ராவத், மத்திய அரசின் அறிவுரை யின்படியே தனக்கு இந்த அவமானம் நேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கும் புகார் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், ‘‘உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களுக்காக டெல்லியில் இருந்து சில பாஜக தலைவர்கள் தங்களது ஹெலிகாப்டரில் கணக்கில் வராத பணத்தை கொண்டு வருகின்றனர்.

ஆனால் அந்த ஹெலிகாப்டர் களை எல்லாம் தேர்தல் ஆணை யம் சோதனை செய்யாமல், எனது ஹெலிகாப்டரை மட்டும் சோதனை நடத்துகிறது. தேர் தலுக்காக இதுவரை ரூ.2,000 கோடியை பாஜக விநியோகித் துள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட் சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT