இந்தியா

உச்ச நீதிமன்ற பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் தற்கொலை

பிடிஐ

உச்ச நீதிமன்ற வளாகத்தில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டெல்லி காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை தற்கொலை செய்து கொண்டார்.

அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அலுவலக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''உச்ச நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் சந்த்பால் என்ற தலைமைக் காவலர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

அவரது பணிநேரம் காலை 7 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையாகும். அவர் ஏப்ரல் 2014-ல் இருந்து உச்சநீதிமன்ற வளாகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை 08.15 மணியளவில் சந்த்பால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.

அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. குற்றவியல் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் தடையங்களை சேகரித்தனர்.

சந்த்பாலின் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலக நண்பர்களிடம் விசாரணை நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT