இந்தியா

ராபர்ட் வதேரா லண்டனில் வீடு வாங்கியதாக புகார்: விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாரா? - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சவால்

பிடிஐ

லண்டனில் தனது மருமகன் ராபர்ட் வதேரா வீடு வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட தயாரா என்று மத்திய அரசுக்கு சோனியா காந்தி சவால் விடுத்துள்ளார்.

ஆயுத தரகர் சஞ்சய் பண்டா ரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

குறிப்பாக, ராபர்ட் வதேராவும் அவரது உதவியாளரும் பண்டாரி யின் உதவியாளருடன் இ-மெயில் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டதற்கான ஆவணம் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. 2009-ம் ஆண்டு லண்டனில் உள்ள ரூ.19 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியது, அதை 2010-ல் விற்றது தொடர்பான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

ஆனால் ராபர்ட் வதேரா நேரடியாகவோ மறைமுகமாகவோ லண்டனில் எந்த சொத்தையும் வாங்கவில்லை என அவரது சட்ட ஆலோசனை நிறுவனம் தெரி வித்துள்ளது. மேலும் பண்டாரி யுடனோ அவரது உதவியாளரு டனோ வதேரா எவ்விதத் தொடர்பும் வைத்திருக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் (உத்தரப் பிரதேசம்) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவினர் ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சியினர் மீது ஒரு குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற அவர்களது திட்டத்தின் ஒரு பகுதிதான் இது.

ராபர்ட் வதேரா மீது அவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் மத்திய அரசு பாரபட்ச மற்ற வகையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசா ரணையில் உண்மை நிலை தெரிந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT