ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது இந்தியாவைச் சேர்ந்த டி.எம்.கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகியோருக்கு நேற்று வழங்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை வாக அரசு பணி, பொது சேவை, கலை, சமூகம் என பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்திய கர்நாடக இசையில் சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் பரப்பி வருவதற்காக பாடகர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் உட்பட 5 பேருக்கு இந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று நடந்த விழாவில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.