இந்தியா

மும்பை பிவாண்டி பகுதியில் கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

பிடிஐ

மும்பை, பிவாண்டி பகுதியில் 2 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

மீட்புப் படையினர் இடிபாடுகளிலிருந்து 4 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கல்யாண் சாலையில் உள்ள அனுமன் தேகடி பகுதியில் உள்ள 2 மாடிக் கட்டிடம் இன்று காலை 8 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 7-8 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தேசியப்பேரிடர் பணிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர், தீயணைப்புப் படை ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களின் சரியான எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.

இது மிகவும் பழையகாலக் கட்டிடம் என்றும் ‘அபாயமான கட்டிடம்’ என்ற பிரிவின் கீழ் இருப்பதாகவும் பிவாண்டி தாசில்தார் வைசாலி லம்பாதே தெரிவித்தார்.

கடந்த ஜூலை 31-ம் தேதி 2 மாடி குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியானார்கள், 10 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT