இந்தியா

ஏழுமலையானுக்கு செல்போனில் காணிக்கை

என்.மகேஷ் குமார்

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு செல்போனில் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டுக்கு காணிக்கை மூலம் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது.

நேரடியாக வரும் பக்தர்கள் மட்டுமே கோவில் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். ஆனால் நேரடியாக கோவிலுக்கு வரமுடியாத பக்தர்களும் காணிக்கை செலுத்தும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பக்தர்கள் இ-உண்டி திட்டம் மூலம் தங்களது செல்போன் மூலமாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தலாம். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திரா வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் (ஐ.எம்.பி.எஸ்) இந்த சேவையை பக்தர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT