வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் மாதந் தோறும் ரூ.1-க்கு தலா 6 கிலோ அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார்.
ஆந்திர மாநிலத்தைப் போலவே தெலங்கானாவிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வெள்ளை ரேஷன் அட்டை மூலம் ரூ.1க்கு அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு குடும்பத் துக்கு 16 கிலோ அரசி மட்டுமே வழங்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலம், மகபூப் நகர் மாவட்டம், கொத்தூரு பகுதி யில் ‘ஆசரா’ எனும் மாத உதவித் தொகை திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது: முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவ ரால் கைவிடப்பட்டோர் என அனை வருக்கும் மாத உதவித் தொகை வழங்க பட்ஜெட்டில் ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி யுடைய ஒவ்வொருவரையும் அரசு நலத் திட்டங்கள் சேர வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோன்று இனி வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு வருக்கும் மாதந்தோறும் ரூ.1-க்கு தலா 6 கிலோ அரிசி வழங்கப்படும். இதற்கான தகுதி இருந்தால் போதும். ரேஷன் அட்டை இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
ரேஷன் அட்டை இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தாரி டம் மனு கொடுத்தால் உடனடியாக ஆய்வு செய்து அவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கே. சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.