இந்தியா

பஞ்சாபில் அகாலி தளம் - பாஜக கூட்டணி ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தும் - மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் நம்பிக்கை

பிடிஐ

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலிதளம் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தும் என மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் நம்பிக்கை தெரிவித்தார்.

117 உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் சிரோமணி அகாலிதள கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்குள் பலத்த போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பஞ்சாபில் நேற்று நடந்த தேர்தலில் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல், லாம்பி தொகுதியில் வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “கடவுளின் கருணையால் எங்களின் அரசு (சிரோமணி அகாலி தளம் பாஜக கூட்டணி அரசு) இம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காகவே எங்கள் அரசு எப்போதும் பாடுபட்டு வந்தது. நாங்கள் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்துவது நூறு சதவீதம் உறுதி. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் தீவிரமாக இருந்தனர். அவ்விரு கட்சிகளும் மோசமான தோல்வியை சந்திக்கும்.

எங்களை நோக்கி விரலை சுட்டும் கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வராக இருந்தபோது என்ன செய்தார்? டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளது என்று ஒவ்வொருவரும் அக்கட்சி யினரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

SCROLL FOR NEXT