மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், தெலுங்கானா தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தனி தெலுங்கானா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததில் இருந்து ஆந்திர மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டங்களை கட்டுப்படுத்துவது குறித்தும் தெலுங்கானா மாநிலத்தை சுமுகமாக அமைப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.
ஆந்திர மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேற்று, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் தெலுங்கானா பிரச்சனையில் ஆந்திர மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.