இந்தியா

சர்வதேச யோகா தினத்தை பேரியக்கமாக மாற்றுங்கள்: யோகி ஆதித்யநாத் கோரிக்கை

பிடிஐ

வரவிருக்கும் சர்வதேச யோகா தினத்தை பேரியக்கமாக மாற்றுங்கள் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டைய இந்திய மரபான யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார் யோகி.

“யோகாவின் முக்கியத்துவத்தை வேதங்களும் ஏற்றுக் கொண்டுள்ளது. யோகாவுக்கு பிரதமர் மோடி சர்வதேச அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளார், சனாதன மரபின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பிரதமர் மோடிக்கு இதற்காக நன்றியுடைவர்களாக இருப்பது அவசியம்.

ஜூன் 21-ம் தேதி யோகா மூலம் கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைகின்றனர், 200 நாடுகளும் இதில் இணைகிறது.

நாமும் அதனுடன் இணைய வேண்டும், சாதாரணமாக சாதிக்க முடியாததை யோகா மூலம் நாம் அடையலாம், ஆன்மீகத்தின் உச்ச நிலைகளை எட்ட யோகாவின் அடித்தளத்தை நாம் வலுப்பெறச் செய்ய வேண்டும்” என்றார் யோகி.

SCROLL FOR NEXT