இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டதையடுத்து, அவர் இன்று புணே எர்வாடா சிறையிலிருந்து வெளியே வந்தார்.
1993- ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று, புணே எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் அவரது உடல்நிலை காரணமாக 30 நாள் பரோலில் வெளியே வந்தார்.
அவரது மனைவி மான்யாதாவிற்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனக்கு ஒரு மாத கால பரோல் வழங்குமாறு புணே மண்டல ஆணையர் பிரபாகர் தேஷ்முக்கிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அவரது மனைவி திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சியிலும், பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது. இதனையடுத்து, அவருக்கு குறுகிய காலத்தில் இரண்டாவது பரோல் வழங்குவது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது.
இந்த விசாரணையின் முடிவில், சஞ்சய் தத்துக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.