டெல்லியில் பிபிஎம்பி காலனியில் வசித்தவர் செவிலியர் ப்ரீத்தி ரதி (23). இவரது அண்டை வீட்டில் வசித்தவர் அன்குர் பன்வார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்ட தாரியான இவர் வேலை கிடைக் காமல் இருந்தார். இந்நிலையில் ப்ரீத்திக்கு மும்பை ராணுவ மருத்துவமனையில் செவிலியர் வேலை கிடைத்ததால் பொறாமை அடைந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் ப்ரீத்தி பணியில் சேருவதற்கு தனது பெற்றோருடன் மும்பை வந்த போது, அதே ரயிலில் அவர்களுக்கு தெரியாமல் பயணம் செய்த அன்குர், தனது முகத்தை மூடியவாறு ப்ரீத்தி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார். முகத்தில் வீசப்பட்ட ஆசிட்டை ப்ரீத்தி தற்செயலாக விழுங்கியதில் தொண்டை, நுரை யீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகளும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ப்ரீத்தி ஜூன் 1-ம் தேதி மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அன்குர் பன்வாரை கைது செய்த மும்பை போலீஸார் அவருக்கு எதிராக கடந்த 2014, ஏப்ரலில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வேலையின்றி இருந்த அன்குரை அவரது வீட்டில் தாழ்த்தியும் பக்கத்துவீட்டு ப்ரீத்தியை புகழ்ந்தும் பேசியதால் அன்குர் பொறாமை அடைந்ததாக போலீஸார் கூறினர்.
மேலும் இறப்பதற்கு முன் ப்ரீத்தி அளித்த வாக்குமூலத்தில், பன்வார் பலமுறை திருமணத்துக்கு வற் புறுத்தியதாகவும் இதை தான் ஏற்காததால் மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இக்கொலை வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மும்பை சிறப்பு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஷெண்டே, அன்குர் பன்வாருக்கு (26) நேற்று மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.