பிஹார் மாநிலம் கோதவா கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா கவுதம். இவருக்கும் பாப்லு குமாருக்கும் கடந்த மே மாதம் திருமணமானது. இந்நிலையில், ஊர் பஞ்சாயத்தில் தன் கணவரை விவாகரத்து செய்வதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
“வீட்டில் கழிப்பறை இல்லை. பல முறை வலியுறுத்தியும் கணவர் கண்டுகொள்ளவில்லை. இருட்டிய பிறகு, திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டியுள்ளது. நிலத்துக்குச் சொந்தக்காரரால் பல முறை அவமானப்படுத்தப்பட்டேன். எனவே இவரை விவாகரத்து செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானேன்” என அர்ச்சனா பஞ்சாயத்தாரிடம் தெரிவித்துள்ளார்.