இந்தியா

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரிப்பு: துணை முதல்வரின் சொத்து 13% உயர்வு

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 4-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அவரது மகனும் துணை முதல்வ ருமான சுக்பிர் சிங் பாதல் இரு வரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதனுடன் சமர்ப்பிக் கப்பட்ட பிரமாண பத்திரத்தில் தங்களது ஒட்டுமொத்த குடும்பத் துக்கும் ரூ.116.55 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத் துகள் இருப்பதாக குறிப்பிட் டுள்ளனர்.

இதில் பஞ்சாப் மாநில முதல்வ ராக 5 முறை பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதலின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.14.48 கோடி என கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடந்த 2012 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த சொத்து மதிப்பு ரூ.6.75 கோடியாக இருந்தது.

பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பிர் சிங் பாதல் மற்றும் அவரது மனைவியும் மத்திய அமைச்சரு மான ஹர்சிம்ரத் கவுருக்கு அசை யும் மற்றும் அசையா சொத்துகள் வகையில் ரூ.102.07 கோடி இருப் பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த முறை அவர்களின் சொத்து மதிப்பு ரூ.90.86 கோடியாக இருந்தது. இதன்மூலம் பாதல் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுக்பிர் சிங்கின் சொத்து மதிப்பு மட்டும் 13 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT