இந்தியா

கிங்பிஷர் பறவை போலவே பறந்துவிட்டார் மல்லையா: மும்பை உயர் நீதிமன்றம் ருசிகரம்

பிடிஐ

கிங்பிஷர் என்று தன் நிறுவனத்திற்கு பறவையின் பெயரைச் சூட்டிய மல்லையா, அந்தப் பறவை போலவே எல்லைகள் பற்றிய கவலையின்றி பறந்து விட்டார் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது

சேவை வரித்துறை செய்திருந்த மேல்முறையீட்டு மனு மற்றும் மல்லையாவின் சொந்த விமானத்தை ஏலம் விடுவதை நிறுத்துமாறும் கோரியிருந்த மனு ஆகியவற்றின் மீதான விசாரணை இன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் பீ.பி.கொலாபாவாலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நடைபெற்றது.

“அவர் (மல்லையா) ஏன் கிங்பிஷர் என்ற பெயர் வைத்தார் என்று யாருகாவது தெரியுமா? வரலாற்றில் இத்தகைய பொருத்தமான பெயரை ஒருவரும் தனது நிறுவனத்திற்கு தேர்வு செய்திருக்க முடியாது. ஏனெனில் கிங்பிஷர் என்பது பறவையின் பெயர், அதற்கு எல்லைகள் தெரியாது, எந்த எல்லையும் அதனை தடுத்து நிறுத்த முடியாது. அதுபோலவேதான் மல்லையாவையும் ஒருவரும் தடுத்து நிறுத்த முடியவில்லை” என்று கூறி கடன் மீட்பு ஆணையம் 2014-ல் அளித்த உத்தரவை எதிர்த்து செய்த மனுவின் மீதான விசாரணையை தள்ளிவைத்தது.

மல்லையாவின் சொந்த விமான ஏலம் குறித்த மனு மீதான விசாரணையையும் செப்.26-ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.

17 வங்கிகள் மூலம் சுமார் 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத மல்லையா கடந்த மார்ச் மாதம் இந்தியாவிலிருந்து பறந்தார். அவர் தற்போது பிரிட்டனில் உள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT