இந்தியா

ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதலை நிறவெறி என்று கூறலாமா?- சுஷ்மா ஸ்வராஜ் வருத்தம்

பிடிஐ

நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதலை ஆப்பிரிக்க குழு நிறவெறியென்றும் பிற நாட்டவர்கள் மீதான வெறுப்பு என்றும் கூறியது வலியைத் தருகிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுஷ்மா இன்று இது தொடர்பாக கூறும்போது, நிறவெறி என்பது முன் கூட்டியே திட்டமிடப்படுவது, ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதலை இவ்வாறாக கூற இடமில்லை. அரசு அவர்கள் பாதுகாப்புக்காக அனைத்தையும் செய்துள்ளது.

தாக்குதல் குறித்து தங்களது கவலைகளை ஆப்பிரிக்க குழுவிடம் வி.கே.சிங் பேசியுள்ளார், மேலும் ஆப்பிரிக்க குழு திருப்தியடையவில்லையெனில் பிரதமருடன் சந்திப்பு கோரலாம். இந்திய அரசின் எதிர்வினை போதாமையானது என்று கூற இடமில்லை.

நம் அரசியல் தலைமை மவுனம் காக்கிறது என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, இதனால் குழுவின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாகவும் வலியை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

19 வயது மணீஷ் என்பவர் மரணம் தொடர்பாக உள்ளூர்வாசிகளிடம் ஏற்பட்ட கோபத்தை சமூக விரோதிகள் சிலர் பயன்படுத்திக் கொண்டனர். காரணம் போதைமருந்து அதிகம் எடுத்துக் கொண்டதே. கென்ய நாட்டு மாணவர் தாக்குதல் உட்பட 2 சம்பவங்கள் குறித்தும் தனியான விசாரணை நடைபெற்று வருகிறது.

6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முடியும் வரை தயவு கூர்ந்து இந்தத் தாக்குதலை நிறவெறித்தனமானது என்று முடிவு கட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை நாங்கள் உடனடியாக நிறவெறி என்று குற்றம்சாட்டவில்லை. கென்யா நாட்டைச் சேர்ந்தவரின் விசாவை நாங்கல் சோதித்த போது அது சில மாதங்களுக்கு முன்பாகவே காலாவதியாகியிருந்தது. அவர் ஏதோ கூறுகிறார் என்பதற்காக உடனே நாம் நிறவெறிப் பாகுபாடு என்று கூறக்கூடாது.

கிரேட்டர் நொய்டாவில் இளைஞர் மரணமடைந்தார், அவரது பெற்றோர் போதை மருந்து அதிகம் எடுத்துக் கொண்டதாக கூறுகின்றனர். இதனையடுத்து உள்ளூர்வாசிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர், இதில் குற்றவாளிகள் உள்ளே ஊடுருவி ஆப்பிரிக்க மாணவர்களைத் தாக்கியுள்ளனர்.

இன்னொரு ஆப்பிரிக்க மாணவி மீது தாக்குதல் நடந்ததாக எழுந்த செய்திகள் தவறு, ஏனெனில் அவரே இதனை மறுத்துள்ளார்.

இவ்வாறு கூறினார் சுஷ்மா.

SCROLL FOR NEXT