ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், ஹரியாணாவில் தேர்தல் பிரச்சாரத் தைத் தொடங்கினார்.
அவருக்கு எதிராக அப்பகுதி யைச் சேர்ந்த சிலர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
ஹரியாணா மாநிலத்தில் 2 நாள் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை கேஜ்ரிவால் சனிக்கிழமை தொடங் கினார்.
பரிதாபாதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பா ளரை ஆதரித்து கேஜ்ரிவால் பேசியதாவது: “அரசு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் காஸ் விலையை உயர்த்தும் நடவடிக் கையை மேற்கொள்ளக்கூடாது. இது தொடர்பாக நான் தெரிவித்த புகாரை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்ட தாக ஊடகங்களில் செய்தி வெளி யாகியுள்ளது. காஸ் விலையை உயர்த்தக் கூடாது என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும் என நம்புகிறேன்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் காஸ் விலையை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு, தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்சம்பத்திடம் புகார் தெரிவித்துள்ளேன்.
மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். காங்கி ரஸோ அல்லது பாஜகவோ ஆட்சி அமைத்தால், நிச்சயமாக காஸ் விலையை பலமடங்கு உயர்த் துவார்கள்.
இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்ற வேண்டுமானால், காங்கிரஸும், பாஜகவும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண் டும். மக்களிடமிருந்து கொள்ளைய டிக்கும் வேலையைத்தான் இந்த இரு கட்சிகளும் செய்து வரு கின்றன.
குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வளர்ச்சிப் பணிகள் எதையும் செய்ய வில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட தாக பிரச்சாரம் செய்து மக்களை முட்டாளாக்கி வருகிறார் மோடி” என்றார் கேஜ்ரிவால்.
கறுப்புக் கொடி போராட்டம்
பரிதாபாதில் கேஜ்ரிவால் பிரச் சாரத்தைத் தொடங்கியபோது, அங்கிருந்த உள்ளூர் மக்கள் சிலர் அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். டெல்லி முதல்வராக தனது கடமையை நிறைவேற்று வதிலிருந்து தப்பிப்பதற்காக கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
கருப்புக் கொடி காட்டிய சம்பவத்தில் பாஜகதான் பின்னணி யாக இருந்து செயல்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் பரிதாபாத் தொகுதி வேட்பாளர் புருஷோத்தம் தாகர் குற்றம் சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பாதி பேர் பாஜகவினர் என்றும், அவர்களில் சிலரின் பெயர்கள் தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்