காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால்தான் ‘அச்சே தின்’ நம் நாட்டில் மீண்டும் திரும்பும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கட்சியின் ‘ஜன் வேதனா சம்மேளன்’ கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியாவை மாற்றுவோம் என்கிறார் பிரதமர் மோடி ஆனால் மக்கள் வாழ்வாதாரங்களையும் சிலர் உயிரையும் இழந்துள்ளனர். இதுதான் மாற்றமா? ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற தூண்களை மோடி ஆட்சி சீரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
பிரதமரின் சமீபத்திய லக்னோ கூட்டத்தை எந்தப் பணத்தில் மூலம் நடத்த முடிந்தது, பணத்தின் மூலம் கூற முடியுமா?
2019-ல் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தால்தான் ‘அச்சே தின்’ மீண்டும் பிறக்கும். முன்பு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை பாஜக-வினர் கேலி செய்தனர். ஆனால் அதுதான் இப்போது பலரது வாழ்வை காப்பாற்றி வருகிறது.
தற்போதைய அரசின் கெடுபிடிகளுடன் ஊடகங்கள் இயங்கி வருகின்றன. யோகா பற்றி பேசும் மோடி அடிப்படையான பத்மாசனம் செய்ய முடியவில்லை.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் பணம் எடுக்க வரிசையில் காத்திருந்து உயிரை விட்டவர்களுக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.
இவ்வாறு பேசினார் ராகுல் காந்தி.