திரிபுரா மாநில அரசியலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் நேற்று மம்தா வின் திரிணமூல் காங்கிரஸில் ஐக்கியமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அம்மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுரா வில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 2013-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 49 இடங்களை கைப்பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. காங்கிர ஸுக்கு 10 இடங்கள் கிடைத்தன. ஒரு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருந்தது.
சமீபத்தில் மேற்குவங்க மாநிலத் தில் நடந்த பொதுத் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என காங்கிர ஸின் மூத்த தலைவரும், திரிபுரா முன்னாள் முதல்வருமான சுதீப் ராய் பர்மன் வலியுறுத் தியிருந்தார். எனினும் திரிணமூல் காங்கிரஸை எதிர்க்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த சுதீப் ராய் பர்மன் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் நேற்று காங்கிரஸில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்துவிட்டதாக சட்டப் பேரவை சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத்திடம் கடிதம் அளித்துள்ளார். மேலும் அவருடன் அஷிஷ் சாஹா, பிஸ்வபந்து சென், சந்திரா ரங்ஹால், பிரான்ஜித் சிங்கா ராய், திலீப் சர்கார் ஆகிய 5 எம்எல்ஏக்களும் திரிணமூல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளனர். மற்றொரு காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவான ஜிதன் சர்க்கார் தனது உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்துவிட்டு ஆளும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணை வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சுதீப் பர்மன் உட்பட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் திரிணமூல் காங்கிரஸில் ஐக்கியமாகி இருப்ப தாக கையொப்பமிட்டு என்னிடம் கடிதம் அளித்துள்ளனர். அதன் உண்மைத் தன்மையை பரிசோதித்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் திரிணமூல் காங்கிரஸில் ஐக்கிய மாகி இருப்பதால் தற்போது திரிபுரா சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் வெறும் மூன்றாக உள்ளது. மேலும் திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக சுதீப் பர்மன் தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான உரிமையை கோரவுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க 6 எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரஜித், சபா நாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.