இந்தியா

கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் ஸ்ரீநிவாசர் பவனி

என்.மகேஷ் குமார்

திருப்பதியை அடுத்துள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

திருப்பதி அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம், ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் புகழ்பெற்ற கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு திருமண கோலத்தில் ஏழுமலையான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த கோயிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாளான நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் ஸ்ரீநிவாசர் திருவீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இரவு கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக திருப்பதி கோவிந்தராஜர் கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் இருந்து மலர் மாலை மற்றும் கிளி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதேபோல திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்திலிருந்து கருட சேவைக்கு அணிவிக்கும் 5 அடுக்கு காசு மாலை ஊர்வலமாக கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரவில் கருட வாகனத்தில் திருவீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானைத் தரிசித்தனர்.

SCROLL FOR NEXT