கோவா மாநிலத்தில் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, லஞ்சம் பற்றி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது புகார் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யுமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
இப்படி பேசவிடாமல் தடுப்பதால் லஞ்சத்துக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார். இது தேர்தல் ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அது கண்டித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று கூறியிருப்ப தாவது:
டெல்லி முதல்வர் என்ற அடிப் படையிலும் ஆம் ஆத்மி கட்சி யின் நட்சத்திர பிரச்சாரகர் என்ற அடிப்படையிலும் தேர்தல் பிரச் சாரத்தின்போது சட்டத்தை மதித்து நடப்பவராகவும் நடத் தையில் மற்றவர்களுக்கு முன்னு தாரணமாகவும் கேஜ்ரிவால் செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருக்கிறார்.
பிரச்சாரக் கூட்டத்தில் கேஜ்ரிவால் பேசியது தொடர்பாக அவர் மீது புகார் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றிய அறிக்கையை ஜனவரி 31-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.