இந்தியா

திருப்பதியில் ரூ.4.69 கோடி உண்டியல் வசூல்

செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் திங்கட்கிழமை மட்டும் ஒரே நாளில் ரூ.4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலை யான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வசதிக்கேற்றபடி நேர்த்தி கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். சராசரி யாக உண்டியல் காணிக்கை மூலம் ஆண்டுதோறும் ரூ.1,300 கோடி வசூலாகி வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் சமீபகாலங்களாக ஒரே நாளில் ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை உண்டியல் காணிக்கை வசூலாகி வருகிறது. திங்கட்கிழமை அன்று மட்டும் ஒரே நாளில் ரூ.4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. நடப்பாண்டில் இந்த தொகை தான் அதிகபட்சம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித் துள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் ரூ.4.22 கோடி வசூலானது தான் அதிகபட்சமாக இருந்தது.

SCROLL FOR NEXT