இந்தியா

ம.பி.யில் கலவரமாக மாறிய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: நெரிசலில் 6 பேர் காயம்

செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு சுமார் 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, முகாமில் கலந்துக்கொள்ள வந்த ஒரு குழுவினர் கலவரத்தில் ஈடுப்பட்டு அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர்.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இன்று (புதன்கிழமை) ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துக்கொள்ள அதிகாலையிலேயே சுமார் 15,000 விண்ணப்பதாரர்கள் வந்தனர். ஆனால் முகாமை ஏற்பாடு செய்யும்போது இந்த எண்ணிக்கை எதிர்ப்பார்க்கப்படாததால் இட நெருக்கடி ஏற்பட்டது.

கூட்டத்தை கட்டுப்படுத்தவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, முகாமில் கலந்துக்கொள்ள வந்தவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மிதிப்பட்டு குறைந்தது 6 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

இதனால் கோபமடைந்த இளைஞர்களில் ஒரு குழுவினர் அந்த பகுதியைச் சேர்ந்த கடைகளை அடித்து நொறுக்கினர், ரயில் நிலையம் தாக்கப்பட்டது, தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.

கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டை வீசியும் பதற்றத்தை கட்டுப்படுத்தினர்.

SCROLL FOR NEXT