அடுத்த பட்ஜெட்டில் இரண்டாம் தலை முறை சீர்திருத்தங்கள் அறி முகப்படுத்தப்பட உள்ளன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட அருண் ஜேட்லி மேலும் கூறியதாவது:
"அடுத்த பட்ஜெட்டில் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படும். வருடத் தின் 365 நாட்களும் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஆனால் அவற்றை எடுத்துக்காட்ட பட்ஜெட்தான் சிறந்த தருணம். அவற்றை நடை முறைப்படுத்தும்போது, அடுத்த நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும்.
நாட்டில் ஏழைகள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்குத்தான் மானியம். ஆனால் ஏழைகள் அல்லாத பணக்கார மக்களும் அரசின் மானியங் களைப் பயன்படுத்து கிறார்கள். இதனால் உண்மையான ஏழைகளுக்கு உதவ முடியாமல் போகிறது. ஆகவேதான் மானியக் குறைப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத மக்களுக்கு அளவில்லாத மானியம் வழங்குவது நம் அடுத்த தலைமுறையின் மீது பாரத்தை ஏற்றும். இதன்மூலம் நாம் அவர்களுக்கு கடனை விட்டுச் செல்கிறோம். அந்தக் கடனை அடைக்க அவர்கள் அதிகளவில் வரி விதிப்பார்கள். அது மானியம் பெறாதவர்கள் மீதும் விழும். இத்தகைய பொருளாதாரம் நாட்டை சீர்குலைத்துவிடும்.
எங்களின் இந்த முயற்சி எங்களுக்கு எதிர்ப்பை ஏற் படுத்தலாம். ஆனாலும் இது எதிர்ப்பவர்களுக்கும் நன்மை தரும் ஒரு விஷயமாகும்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கத்தில் சுமார் 294 நகரங்களில் 800க்கும் அதிகமான புதிய வானொலி அலைவரிசைகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. தவிர, தனியார் பண்பலை களில் செய்திகள் வாசிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
வலிமையான மனமே மோடியின் பலம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்த காலங்களில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக நான் மோடியை அருகில் இருந்து கவனித்து வருகிறேன். அவர் கடின உழைப்பாளி. அதனால்தான் அவர் முதல்வர் பதவியில் இருந்து பிரதமர் பதவிக்கு வளர்ந்து தற்போது சர்வதேசத் தலைவர்களில் முக்கியமானவராக மாறியிருக்கிறார். அவரின் வலிமையான மனம்தான் அவரின் பலம்".
இவ்வாறு அவர் கூறினார்.