எத்தகைய தீவிரவாத தாக்குதல்களுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, "அனைத்து நாடுகளுடனும் நட்பு கொண்டாடவே இந்தியா எண்ணுகிறது. பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.
பாகிஸ்தான் நமது அண்டை நாடு. அவர்களோடு சுமூக உறவில் இருக்கவே நினைக்கிறோம், அதற்காக அங்கிருந்து வரும் அனைத்து தீவிரவாதத் தாக்குதல்களையும் சகித்துக்கொள்ள மாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம். நம் படையினர் தீவிரவாதிகளை மிகச் சிறப்பாக எதிர்கொண்டனர்" என்றார்.