இந்தியா

செவிலியர்கள் போராட்டத்தை ஒடுக்க எஸ்மா சட்டம் பிறப்பித்தது டெல்லி அரசு

பிடிஐ

டெல்லியில் செவிலியர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா) மாநில அரசு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் ஊதியம் மற்றும் பிற படிகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்திய அரசு செவிலியர்கள் கூட்டமைப்பு செய்தித் தொடர்பாளர் லீலாதர் ராம்சந்தானி நேற்று முன்தினம் கூறும்போது, “எங்கள் கோரிக்கை தொடர்பான அரசின் பதிலில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடங்குகிறோம். என்றாலும் அவசர சிகிச்சைக்கு மட்டும் உதவுவோம்” என்றார்.

செவிலியர்கள் போராட் டம் காரணமாக அரசு மருத்துவ மனைகளில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவி வரும் சூழலில் இந்தப் போராட்டத்தால் மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் செவிலியர்கள் போராட்டம் சட்டவிரோதம் என அறிவிப்பதற்காக எஸ்மா சட்டத்தை டெல்லி அரசு பிறப்பித் துள்ளது. இது தொடர்பான மாநில அரசின் பரிந்துரைக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

டெல்லி சப்தர்ஜங் மருத்துவ மனையில் 160 ஒப்பந்த ஊழியர் உட்பட 1,100 செவிலியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இங்கு கடந்த ஜூலை மாதம் டெங்கு காரணமாக 3 பேர் இறந்தனர். இங்கு ஆகஸ்ட் மாதத்தில் 29-ம் தேதி வரை டெங்குவால் பாதிக்கப்பட்ட 263 பேரும் சிக்குன்குனி யாவால் பாதிக்கப்பட்ட சுமார் 250 பேரும் சிகிச்சைக்கு வந்துள்ளனர்.

மாநில அரசின் பரிந்துரைக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

SCROLL FOR NEXT