மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவு தனது மகன் ராகுல் காந்தியுடன் டெல்லி திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி மக்களவை தொகுதி யில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நடந்த காங்கிரஸ் கட்சியின் பேரணி யில் சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் டெல்லி திரும்பினார். இதன் பின், இருமுறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சூழலில் சில மாதங் களுக்கு முன் கட்சியின் அனைத்துப் பணிகளையும் துணைத் தலைவரான ராகுல் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். இதனால் உ.பி., உத்தரா கண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இந் நிலையில் வெளிநாட்டில் மேற் கொண்டிருந்த மருத்துவ பரிசோ தனை முடிந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவு தனது மகன் ராகுல் காந்தியுடன் டெல்லி திரும்பினார். முன்னதாக சோனியாவை அழைத்து வருவதற்காக கடந்த 16-ம் தேதி ராகுல் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.
சோனியாவுக்கு எந்த நாட்டில் என்ன மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது உள்ளிட்ட தகவல் களைத் தெரிவிக்க கட்சி வட்டாரங் கள் மறுத்துவிட்டன.