இந்தியா

இந்தியாவில் இதுவரை எபோலா இல்லை: சுகாதார அமைச்சர் நட்டா தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் இதுவரை எபோலா நோய் பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்த ஜெ.பி.நட்டா, "இந்தியாவில் இதுவரை எபோலா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து எபோலா நோய்க்கிருமி பரவுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. அதையும் மீறி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்து அரசு ஆயத்தமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

எபோலா தொற்று உள்ள நாடுகளில் இருந்துவரும் பயணிகளை கண்காணிக்க துறைமுகங்கள், விமானநிலையங்களில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புனே, டெல்லி என இரண்டு மையங்களில் நோய் தொற்று பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் இருந்து சேமிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT