கல்வியறிவில் இந்தியா 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக அரசும், தனியார் அமைப்புகளும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச கல்வியறிவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது:
தூய்மை இந்தியா, கல்வியறிவு இந்தியா திட்டங்கள் ஒரு நாணயத் தின் இரு பக்கங்களை போன்றவை. கல்வியறிவு இல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமை பெறச் செய்ய முடியாது. நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்தாலும், கல்வியறிவில் இதுவரை தன்னிறைவு பெற வில்லை. எனவே, கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் அவசியமானதாகும்.
கல்வியறிவில் நாடு 100 சதவீதத்தை எட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை அரசுடன் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.