இந்தியா

ராகுல் பிரதமராக வேண்டும் : ஷிண்டே விருப்பம்

செய்திப்பிரிவு

ராகுல் காந்தி அடுத்த பிரதமராகப் பதவியேற்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸாரின் விருப்பம் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

வரும் 2014 ஆம் ஆண்டு இளைஞர்களின் அரசு அமையும்; இளைஞர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவர் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதை வரவேற்றுள்ள ஷிண்டே, ராகுல் அடுத்த பிரதமராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஷிண்டே கூறும்போது, “ராகுலின் கருத்தை நான் வரவேற்கிறேன். தலைமைப் பொறுப்பு இளையதலைமுறையின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என மிகச் சரியாக அவர் கூறியிருக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்” என்றார்.

SCROLL FOR NEXT